June holiday homework higher tamil e-book By : d . Harini , 5c1
அழகா? பயனா? அழகா? பயனா?
ஓர் அடர்ந்த காட்டில் மான் ஒன்று வாழ்ந்து வந்தது.
ஒரு நாள், மான் வெகு நேரம் உணவு தேடி அலைந்தது ஒரு நாள், மான் வெகு நேரம் உணவு தேடி அலைந்தது. அதனால், அதற்கு தாகம் எடுத்தது. தாகம் எடுத்ததால் அது அருகில் இருந்த ஓர் ஏரியை நோக்கிச் சென்றது.
மான் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, தனது பரந்த கொம்புகளின் அழகைத் தண்ணீரில் பார்த்து பெருமிதம் கொண்டது; ஆனால், தனது மெலிந்த கால்கள் தன் அழகைக் கெடுப்பதாக நினைத்தது.
அப்போது, யாரோ காய்ந்த இலைகள் மேல் நடக்கும் சத்தம் கேட்டது அப்போது, யாரோ காய்ந்த இலைகள் மேல் நடக்கும் சத்தம் கேட்டது. மான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தது. வேடன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் தன்னை நோக்கி குறி வைத்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.
ஆபத்தை உணர்ந்த மான் உடனே ஓட்டம் எடுத்தது ஆபத்தை உணர்ந்த மான் உடனே ஓட்டம் எடுத்தது! எந்த கால்களைக் கண்டு வெட்கமடைந்ததோ, அந்தக் கால்களின் உதவியால் மின்னல் வேகத்தில் காட்டிற்குள் ஓடி வேடனிடமிருந்து தப்பியது.
அது தன் அறியாமையை நினைத்து வருந்தியது அது தன் அறியாமையை நினைத்து வருந்தியது. அழகினால் மட்டும் பயனில்லை என்பதை மான் நன்றாக உணர்ந்து கொண்டது.
*** முற்றும்! ***