Download presentation
Presentation is loading. Please wait.
1
Plus Two Commerce - Study Material
(Tamil Medium) Lesson 3 கூட்டாண்மை வணிகம் (Partnership) 11/17/2018 MMS
2
MMS www.maduraicommerce.com
Prepared by M.Muthu Selvam M.Sc.,M.Com.,M.Ed.,M.Phil PG.Asst., (Commerce) MLWA.Hr.Sec.School Madurai Mail Id : Mobile No : 11/17/2018 MMS
3
வணிகவியல் வினாத்தாள் வடிவமைப்பு
வணிகவியல் வினாத்தாள் வடிவமைப்பு தலைப்பு பகுதி அ மார்க் பகுதி ஆ மார்க் பகுதி இ மார்க் பகுதி ஈ மார்க் மொத்தம் அமைப்பு 3 2 1 39 தனி வணிகம் ….. 27 கூட்டாண்மை 7 43 நிறுமம் I 51 நிறுமம் II 6 42 பங்குமாற்றகம் கூட்டுறவு 4 40 அரசு தொழில் 15 8 324 11/17/2018 MMS
4
கூட்டாண்மை வரைவிலக்கணம் DEFINITION OF PARTNERSHIP
இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932 பிரிவு 4ன் படி "எல்லோரும் சேர்ந்தோ எல்லோருக்காக ஒருவரோ நடத்தும் தொழிலின் லாபத்தைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டவர்களிடையே நிலவும் உறவு" ஆகும். 11/17/2018 MMS
5
கூட்டாண்மையின் சிறப்புக்கூறுகள் FEATURES OF PARTNERSHIP
1. உடன்பாடு : Agreement கூட்டாளிகளிடையே எழும் உடன்பாட்டால் ஏற்படும் உறவு இது. உடன்பாடு பேச்சு வடிவிலோ, எழுத்து வடிவிலோ இருக்கலாம். எழுதப்பட்ட உடன்பாடு எதிர்காலத்தில் பிரச்சனை எழாமல் தடுக்க உதவும். எனவே அதுவே சிறந்தது. 11/17/2018 MMS
6
2. பல நபர்கள் Multiplicity of Person
கூட்டாண்மையில் கூட்டாளிகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை 2 அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை, வங்கித் தொழிலாயின் 10, பிற தொழிலாயின் 20 ஆகும். 11/17/2018 MMS
7
3. ஒப்பந்த உறவு Contractual Relation
இந்தியாவில் கூட்டாண்மை சட்டத்தின் படி, கூட்டு வணிகம் ஒப்பந்தத்தால் ஏற்படுகிறது. பிறப்பின் காரணமாகவோ, தகுநிலை காரணமாகவோ இது உருவாவதில்லை. உடன்பாடு கொள்ள சட்டப்படி தகுதி உடையவர்கள் மட்டுமே கூட்டாளிகளாக இருக்க முடியும். பித்தர், நொடிப்பு நிலையர் போன்றோர் கூட்டாளிகளாக முடியாது. 11/17/2018 MMS
8
4. சட்டத்திற்குட்பட்ட தொழில் Lawful Business
கூட்டாண்மைக்கு அடிப்படையாக ஒரு தொழில் இருக்க வேண்டும். அத்தொழில் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். சட்டத்திற்கு புறம்பானதாக இருத்தல் கூடாது. 11/17/2018 MMS
9
5. இலாபப்பங்கு Sharing of Profits
உடன்பாட்டில் உள்ளபடி இலாப நட்டங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். முதலின் அடிப்படையிலும் பகிர்ந்து கொள்ளலாம். ஒப்புக்கொண்ட விகிதம் உடன்பாட்டில் இல்லையெனில் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். 11/17/2018 MMS
10
6. முகமை உறவு Agency Relationship
கூட்டாளிகளுக்கிடையே முகவர், முதல்வர் என்ற உறவு உள்ளது. ஒவ்வொரு கூட்டாளியும் முதல்வராகவும், முகவராகவும் செயல்படுகிறார்கள். அனைவர் சார்பில் கூட்டாளி எவருமோ தொழில் செய்யலாம். கூட்டாண்மை என்பதே முகமைக் கோட்பாட்டின் விரிவாக்கம். 11/17/2018 MMS
11
7. வரையறாப் பொறுப்பு Unlimited Liability
கூட்டாளி ஒவ்வொருவரும் வரையறாப் பொறுப்பாளி. தொழில் கடன்களுக்கு சொந்த சொத்துக்கள் பொறுப்பேற்க வேண்டும். இவர்கள் கூட்டு மற்றும் தனிப்பொறுப்பு வாய்ந்தவர்கள். கடனீந்தோர் கடன்தொகையை அனைத்து கூட்டாளிகளின் சொத்திலிருந்தோ, ஏதேனும் ஒரு கூட்டாளியின் சொத்திலிருந்தோ கோரலாம். இதுவே கூட்டு, தனிப்பொறுப்பாகும். 11/17/2018 MMS
12
8. உட்கிடை ஆணையுரிமை Implied Agency
ஒரு கூட்டாளி நல்லெண்ணத்துடன் நிறுவனத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கை மற்ற கூட்டாளிகளையும், நிறுவனத்தையும் கட்டுப்படுத்தும். இது எழுதப்பட்ட உரிமையாக இருக்க வேண்டுவதில்லை. 11/17/2018 MMS
13
9. பூரண நல்லெண்ணம் Utmost Good Faith
கூட்டாளிகளிடையே நல்லெண்ணம், பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் அமைந்த உறவு. ஒரு கூட்டாளி பிற கூட்டாளிகளிடம் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். இரகசிய லாபம் ஏதும் ஈட்டக்கூடாது. 11/17/2018 MMS
14
10. உரிமை மாற்ற இயலாமை Non-Transferability of Interest
அனைத்து கூட்டாளிகளின் ஒப்புதலின்றி தன் பங்கை பிறருக்கு மாற்றித்தரவோ, விற்கவோ முடியாது. 11/17/2018 MMS
15
MMS www.maduraicommerce.com
11. பதிவு Registration இந்தியாவில் பதிவு விருப்பத்திற்குட்பட்டது. எந்த நிலையிலும் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம் இதனால் நன்மை ஏற்படும். எனவே பதிவு செய்வது நல்லது. 11/17/2018 MMS
16
கூட்டாண்மை அமைப்பின் நிறைகள் ADVANTAGES OF PARTNERSHIP FIRM
1. அமைத்தல் எளிது Easy Formation நிறுமச் சட்ட முறைப்படி பல ஆவணங்கள் தயார் செய்வதுபோல் இதில் தேவையில்லை. கூட்டாண்மையை துவங்க கூட்டாளிகளிடையே உடன்பாடே போதும். 11/17/2018 MMS
17
2. பதிவு கட்டாயமில்லை Registration not compulsory
கூட்டாண்மை பதிவு விருப்பத்திற்குட்பட்டது. மேலும் எந்த நிலையிலும் விரும்பினால் பதிவு செய்து கொள்ளலாம். 11/17/2018 MMS
18
3. அதிக நிதி ஆதாரங்கள் Larger Financial Resources
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் முதல் வழங்குவதால் அதிக முதல் திரட்ட வாய்ப்பு உள்ளது. வரையறா பொறுப்பு உள்ளதால் அதிக கடன் பெறும் திறன் இவ்வமைப்புக்கு உள்ளது. 11/17/2018 MMS
19
4. கூடுதல் மேலாண்திறன் Greater Managerial Talent
ஒன்றுக்கு மேற்பட்டோர் உள்ளனர். எனவே, திறமைக்கேற்ப பணிகளை பகிர்ந்து செய்கின்றனர். பல்வேறு பணித்துறைகளையும் பல்வேறு திறத்துடன் அவரவர் மேற்கொள்வதால் வளர்ச்சியும், லாபமும் அதிகமாகும். 11/17/2018 MMS
20
5. சிறந்த தொழில் முடிவுகள் Quicker and Better Business Decisions
பல கூட்டாளிகள் உள்ளதால் கலந்து ஆலோசித்து விவாதித்து நல்ல, சிறந்த தொழில் முடிவுகளை எடுக்க முடியும். கூட்டாளிகளின் கூட்டறிவின் அடிப்படையில் சிறந்த முடிவுகள் அமையும். 11/17/2018 MMS
21
6. இடர்பாட்டில் பங்கேற்பு Sharing of Risk
பன்மை உரிமையுள்ளதால் தொழில் இடரை சுமக்க அதிக தோள்கள் உள்ளன. இதனால் இடர் பயம் குறைந்து புதிய தொழில் முயற்சியும்,தொழில் விரிவாக்கமும் தைரியமாக மேற்கொள்ளப்படும். 11/17/2018 MMS
22
7. சிறுபான்மை நலம் காப்பு Protection of Minority Interests
முக்கிய தொழில் முடிவுகளை அனைத்து கூட்டாளிகளும் உடன்பாட்டால் மட்டுமே மேற்கொள்ளமுடியும். இதனால், சிறுபான்மை கூட்டாளிகளின் நலன்களை பெரும்பான்மை கூட்டாளிகள் புறக்கணிக்க முடியாது. 11/17/2018 MMS
23
8. நெகிழ்வுத் தன்மை Flexibility
கூட்டாளிகளின் இசைவுடன் எந்த மாற்றத்தையும் எளிதில் மேற்கொள்ளலாம். 11/17/2018 MMS
24
9. நேரடி மேற்பார்வை Close Supervision
உரிமையாளர்களே மேற்பார்வை செய்வதால் சிக்கனம், வீண்விரயம் தவிர்த்தல் போன்றவை சுலபம். மேலும் பணியாளர்களுடன் நேரடி உறவு கொள்வதால் தொழிலாளர் பிரச்சனைகளை வளரவிடாமல் அவ்வப்போது தீர்க்கலாம். 11/17/2018 MMS
25
10. சிறந்த மக்கள் தொடர்பு Better Human and Public Relations
அதிக கூட்டாளிகள் எனவே பணியாளர், நுகர்வோர், அரசு, பொதுமக்கள் ஆகியோருடன் நேரடி தொடர்பு கொண்டு, உறவு நல்லமுறையில் ஏற்படுத்தி நிறுவன நற்பெயரை உயர்த்தமுடிகிறது. 11/17/2018 MMS
26
கூட்டாண்மை அமைப்பின் குறைகள் DISADVANTAGES OF PARTNERSHIP FIRM
1. வரையறாபொறுப்பு Unlimited Liability தொழில் கடன்களுக்கு கூட்டாளிகளின் சொந்த சொத்து பொறுப்பேற்க வேண்டும். அதுவும் கூட்டு மற்றும் தனி பொறுப்பு. ஏதேனும் கூட்டாளி தவறிழைத்தாலும் அனைவரின் சொந்த சொத்தும் பாதிக்கப்படும். இந்த நிலைகூட்டாளியாக சேர யாருக்கும் தயக்கத்தை ஏற்படுத்துகிறது. 11/17/2018 MMS
27
2. போதுமான நிதியின்மை Limited Resources
பல கூட்டாளிகள் இருப்பினும் மிக அதிக முதல் திரட்டி பேரளவு தொழில் மேற்கொள்ள முடியாது. மேலும், கடன் அதிகம் பெறலாம் என்றாலும் வட்டி அதிகம் செலுத்த வேண்டிவரும் மற்றும் தனிச்சொத்துக்களுக்கும் இடர் ஏற்படும். 11/17/2018 MMS
28
3. உட்கிடை ஆணையுரிமை அபாயம் Danger of Implied Agency
ஒரு கூட்டாளியின் செயல் பிற கூட்டாளிகளை கட்டுப்படுத்தும். நேர்மையற்ற, திறமையற்ற ஒரு கூட்டாளி தன் செய்கையால் பிறருக்கு தீமை இழைக்க வாய்ப்பு உள்ளது. 11/17/2018 MMS
29
4. உரிமை மாற்ற தடை Limitation on Transfer of Share
அனைவரின் இசைவின்பேரில் தான் தன்பங்கை மற்றவருக்கு மாற்ற முடியும். அனைவரின் இசைவு எளிதல்ல மேலும் இட்டமுதலீடு நிரந்தரமாகி விரும்பும்போது திரும்பப்பெற முடியாது. 11/17/2018 MMS
30
5. நீடித்த வாழ்வின்மை Lack of Continuity
ஒரு கூட்டாளியின் மரணம், விலகல் போன்றவை கூட்டாண்மை அமைப்பை முடிவுக்கு கொண்டு வந்துவிடும். கூட்டாளி விரும்பினாலும் கலைத்துவிடலாம். கூட்டாளிகள் வேறு, கூட்டாண்மை வேறு அல்ல. 11/17/2018 MMS
31
கூட்டாளிகளின் உரிமைகள் RIGHTS OF PARTNERS
1. ஒவ்வொரு கூட்டாளிக்கும் தொழிலை நடத்தவும் மேலாண்மையில் பங்கேற்கவும் உரிமை உண்டு. 2. ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவன தொடர்பான பிரச்சனைகளுக்கு தம் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. 3. முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் தங்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் கோருவதற்கு உரிமை உண்டு. 11/17/2018 MMS
32
கூட்டாளிகளின் உரிமைகள் RIGHTS OF PARTNERS
4. ஒவ்வொரு கூட்டாளிக்கும் நிறுவன ஏடுகளையும், கணக்குகளையும் கண்காணித்து நகலெடுக்கும் உரிமை உண்டு. 5. ஒவ்வொரு கூட்டாளிக்கும் இலாபத்தில் சமபங்கேற்க உரிமை உண்டு. 6. தொழிலுக்கு வழங்கிய கடன் மற்றும் முன்பணம் மீது 6% வட்டி பெற உரிமை உண்டு. 7. அன்றாட வியாபாரத்தில் தாம் செய்த செலவுக்கு ஈட்டுரிமை பெற உரிமை உண்டு. 11/17/2018 MMS
33
கூட்டாளிகளின் உரிமைகள் RIGHTS OF PARTNERS
8. தொழிலுக்காக நிறுவன சொத்துக்களை நிறுவனத்தில் சேர்ப்பதை தடுக்க உரிமையுண்டு. 9. ஒப்புதல் இன்றி புதிய கூட்டாளிகளை நிறுவனத்தில் சேர்ப்பதை தடுக்க உரிமையுண்டு. 10. நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற உரிமை உண்டு. 11/17/2018 MMS
34
கூட்டாளியின் கடமைகள் DUTIES OF PARTNERS
அனைத்து கூட்டாண்மைக்கும் பொருந்தும், உடன்பாட்டால் மாற்றமுடியாத சட்டத்தால் நிரந்தரமாக கொடுக்கப்பட்ட கடமைகளே முழுமையான கடமைகள் : 1) ஒவ்வொரு கூட்டாளியும் தன் கடமைகளை கவனக்குறைவின்றியும், நாணயமாகவும், அனைத்து கூட்டாளிகளின் நலனுக்காகவும் நிறைவேற்ற வேண்டும். 11/17/2018 MMS
35
கூட்டாளியின் கடமைகள் DUTIES OF PARTNERS
2) ஒவ்வொரு கூட்டாளியும் ஏனைய கூட்டாளிகளிடம் விசுவாசமாகவும், உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். 3) தனக்கு ஒப்படைக்கப்பட்ட அதிகார வரம்பிற்குள் செயல்பட வேண்டும். 4) வேறு வகையில் உடன்பாடு இல்லாத போது நிறுவன நட்டத்தை சமமாக பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டவர். 11/17/2018 MMS
36
கூட்டாளியின் கடமைகள் DUTIES OF PARTNERS
5) தொழில் நடவடிக்கையில் தான் அறிந்து செய்த தவறினால் ஏற்பட்ட நட்டத்துக்கு நிறுவனத்திற்கு ஈட்டுறுதி செய்ய வேண்டும். 6) பிற கூட்டாளிகளின் இசைவின்றி தன் பங்கை பிறருக்கு மாற்றக் கூடாது. 7) நிறுவன தொழில் சார்ந்த கணக்குகளை உண்மையாகவும், சரியாகவும் வைத்திருக்க வேண்டும். 11/17/2018 MMS
37
கூட்டாளியின் கடமைகள் DUTIES OF PARTNERS
8) கூட்டாண்மை தொழிலுக்கு எதிராக எத்தொழிலையும் போட்டியாக கூட்டாளி நடத்தக்கூடாது. 9) நிறுவன சொத்துக்களை நிறுவன நலனுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். 10) எக்கூட்டாளியும் இரகசிய லாபங்களை ஈட்டக்கூடாது. 11/17/2018 MMS
38
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படும் சூழ்நிலைகள் Modes of dissolution of firms (1)கூட்டாளிகளின் உடன்பாட்டால் (பிரிவு:40) Dissolution by Agreement அனைத்து கூட்டாளிகளின் சம்மதத்தின் பேரில் அல்லது கூட்டாளிகளுக்கிடையே ஏற்படும் உடன்பட்டால் கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படலாம். 11/17/2018 MMS
39
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படும் சூழ்நிலைகள் Modes of dissolution of firms (2) கட்டாயக் கலைப்பு (பிரிவு:41) Compulsory dissolution அனைத்து அல்லது ஒருவர் தவிர மற்ற எல்லா கூட்டாளிகளின் நொடிப்பு நிலையால் நிறுவனம் கட்டாயமாக கலைக்கப்படும். செய்து வரும் தொழில் சட்டத்திற்கு புறம்பானதாக இருந்தால் நிறுவனம் கட்டாயமாக கலைக்கப்படும். 11/17/2018 MMS
40
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படும் சூழ்நிலைகள் Modes of dissolution of firms (3) சில நிகழ்ச்சிகள் நிகழ்வுறுவதால் கலைப்பு (பிரிவு:42) Dissolution on the happening of certain contingencies (அ) ஒரு கூட்டாளி இறந்துவிடின் (ஆ) குறித்த கால கூட்டாண்மையின் காலம் முடிவடைந்தவுடன் (இ) குறித்த செயல் கூட்டாண்மையில் அச்செயல் நிறைவு பெற்றவுடன் (ஈ) ஒரு கூட்டாளி நொடிப்பு நிலை அடைந்து விட்டதாக நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பின் 11/17/2018 MMS
41
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படும் சூழ்நிலைகள் Modes of dissolution of firms (4) விருப்பு முறி கூட்டாண்மை கலைப்பு (பிரிவு43) Dissolution by notice of partnership-at-will விருப்பமுறி கூட்டாண்மையில் கூட்டாளி ஏவரேனும் நிறுவனத்தை கலைக்கும் படி பிற கூட்டாளிகளுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தால் நிறுவனம் கலைக்கப்படும். 11/17/2018 MMS
42
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை நிறுவனம் கலைக்கப்படும் சூழ்நிலைகள் Modes of dissolution of firms (5) நீதிமன்றத்தால் கலைப்பு (பிரிவு:44) Dissolution through Court நீதிமன்றத்தில் கூட்டாளி ஒருவர் கீழ்காணும் காரணங்களினால் வழக்கு தொடர்ந்து நிறுவனத்தை கலைக்கலாம். (அ) கூட்டாளியின் மனச்சமநிலை இழப்பு (ஆ) கூட்டாளிக்கு ஏற்படும் நிலையான திறமையின்மை (இ) உடன்பாட்டை தொடர்ந்து மீறுகை (ஈ) கூட்டாளி ஒருவரின் ஒழுக்கக் கேடு (உ) அனுமதியின்றி கூட்டாளி தொழிலின் பங்கை உரிமை மாற்றம் செய்தால் (ஊ) நீதி நேர்மை அடிப்படையில் 11/17/2018 MMS
43
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை – தனியாள் வாணிகம் – ஒப்பு நோக்குக COMPARISON BETWEEN SOLE TRADERSHIP AND PARTNERSHIP ORGANISATION ஒற்றுமைகள்: Similarities 1. இரு தொழில்களையும் சட்ட சிக்கலின்றி அமைப்பது எளிது 2. இரு அமைப்பிலும் நெகிழ்ச்சித்தன்மை அதிகம் 3. நீடித்த வாழ்வு இரண்டிற்கும் இல்லை 4. இரண்டிலும் தொழில் கடனுக்காக சொந்த சொத்து பாதிக்கும் வரையறா பொறுப்பு 11/17/2018 MMS
44
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை – தனியாள் வாணிகம் – ஒப்பு நோக்குக COMPARISON BETWEEN SOLE TRADERSHIP AND PARTNERSHIP ORGANISATION 5. இரண்டிலும் பேரளவுத் தொழில் இல்லை 6. இரண்டிற்கும் அரசுக் கட்டுப்பாடு குறைவு 7. இரண்டிலும் கட்டாய தணிக்கை இல்லை 8. சிறு அமைப்பு என்பதால் நேரடி நுகர்வோர் தொடர்பு உண்டு 9. இரண்டிலும் பணியாளர்களிடம் நேரடி தொடர்பு உண்டு 10. உரிமை மேலாண்மை இணைந்திருக்கிறது. 11/17/2018 MMS
45
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை – தனியாள் வாணிகம் வேறுபாடுகள் Differences between Partnership and Sole Trader தன்மைகள் கூட்டாண்மை தனியாள் வணிகம் 1. சட்டம் இந்திய கூட்டாண்மைச் சட்டம் நெறிப்படுத்துகிறது. இதற்கென தனிச்சட்டம் ஏதுமில்லை 2. உறுப்பினர் குறைந்த அளவு 2 பேர், அதிக அளவு வங்கித்தொழில் எனில் 10 பேர் இதர தொழில் எனில் 20 பேர் இதில் ஒரே ஒருவர் மட்டுமே உறுப்பினர் 3. உடன்பாடு கூட்டாளிகளுக்கிடையேயான உடன்பாட்டால் உருவாக்கப்படுகிறது ஒருவர் மட்டுமே உரிமையாளர் என்பதால் உடன்பாடு எழ வாய்ப்பில்லை 4. பதிவு கட்டாயமில்லை. விருப்பத்திற்குட்பட்டது. இதில் பதிவு என்ற பேச்சுக்கே இடமில்லை 5. முதல் ஒன்றுக்கு மேற்பட்டோர் முதலிடுவதால் அதிக முதல் திரட்டலாம். ஒரு நபர் மட்டுமே முதலிடுவதால் அதிக முதல் திரட்ட முடியாது 11/17/2018 MMS
46
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை – தனியாள் வாணிகம் வேறுபாடுகள் Differences between Partnership and Sole Trader தன்மைகள் கூட்டாண்மை தனியாள் வணிகம் 6. பொறுப்பு வரையறா பொறுப்பில் கூட கூட்டு மற்றும் தனிப்பொறுப்பு இதில் தனிநபர் வரையறா பொறுப்பு மட்டும். 7. முகமை ஒவ்வொரு கூட்டாளியும், கூட்டாண்மையின் முதல்வராகவும், ஏனைய கூட்டாளியின் முகவராகவும் செயல்படுகிறார் முகமை செயல்பாடு என்பது தனியாள் வணிகத்தில் இல்லை 8. இலாபப் பகிர்வு உடன்பாட்டின்படி அல்லது சமமாக இலாபநட்டத்தை பகிர்ந்து கொள்வர் இலாபமோ, நட்டமோ இதில் ஒருவரே ஏற்க வேண்டும். 9. முடிவுகள் அனைத்து கூட்டாளிகளையும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்எனவே காலதாமதமாகும். யாரையும் கலந்து ஆலோசிக்கத் தேவையில்லை என்பதால் முடிவுகளை விரைவாக எடுக்கலாம் 10. வேலைபகிர்வு பல உறுப்பினர்கள் உள்ளதால் தன் திறனுக்கேற்ப ஒவ்வொருவரும் நிறுவன வேலையை பகிர்ந்து செய்வர் ஒருவர் மட்டுமே உரிமையாளர் என்பதால் வேலை பகிர்வுக்கு வாய்ப்பே இல்லை. 11/17/2018 MMS
47
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மையில் இளவரின் நிலை The position of minor in the partnership firm (அ) உரிமை வயது அடையும் முன் நிலை : Position before attaining majority 1. அவர் கூட்டாண்மைச் சொத்திலும், இலாபத்திலும் ஒப்புக்கொண்டபடி பங்குபெறலாம். 2. நிறுவன கணக்குகளைப் பார்வையிட்டு, அவற்றின் நகல் எடுக்க உரிமை உண்டு. 3. அவருடைய முதலீட்டிற்கு மேல், தொழிலின் பொறுப்புகளுக்கு அவரோ, அவரது சொத்துக்களோ பொறுப்பாவதில்லை. 11/17/2018 MMS
48
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மையில் இளவரின் நிலை The position of minor in the partnership firm (ஆ) உரிமை வயது அடைந்த பின் நிலை : Position after attaining majority 1. உரிமை வயதடைந்தபின் கூட்டாளியாக தொடர்வதா, வெளியேறுவதா என்ற விருப்பத்தை 6 மாதத்திற்குள் இளவர் அறிவிக்க வேண்டும். 2. அவ்வாறு செய்யாவிட்டால் இளவர் சேர்ந்த நாள் முதற்கொண்டு நிறும கடன்களுக்குப் பொறுப்பாவார். 3. தொடர விரும்பவில்லை என அறிவித்தால், அந்நாளிலிருந்து நிறுவன கடன்களுக்கு அவர் பொறுப்பாகமாட்டார். 11/17/2018 MMS
49
MMS www.maduraicommerce.com
கூட்டாண்மை நிறுவனத்தை பதிவு செய்ய பின்பற்றப்படும் சட்டமுறைகள் Procedure for Registration a Partnership Firm கூட்டாண்மையை எந்நிலையிலும் உரிய படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம். உரிய கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு கூட்டாளியும் அப்படிவத்தில் கையொப்பமிட வேண்டும். கீழ்காணும் விவரங்கள் அப்படிவத்தில் இருக்கும்: 1) நிறுவனத்தின் பெயர் 2) வணிகத்தின் தலைமை இடம் 3) ஒவ்வொரு கூட்டாளியின் பெயரும் முகவரியும் 4) தொழில் தொடங்கிய நாள் 5) நிறுவனம் நிறுவனத்தின் காலவரையறை பதிவாளர் படிவத்தை ஆய்ந்து பின் நிறுவன பதிவேட்டில் பதிவார். சான்றிதழ் ஒன்றும் வழங்குவார். இதுவே பதிவுச் சான்றிதழ். 11/17/2018 MMS
50
MMS www.maduraicommerce.com
11/17/2018 MMS
51
உழையா கூட்டாளி Sleeping Partner or Dormant Partner
உழையா கூட்டாளிகள் தொழிலில் முதலிடுவர். ஆனால் தொழில் நிர்வாகத்தில் பங்கு பெறுவதில்லை. இவ்வகை கூட்டாளிகள் உறங்கும் கூட்டாளிகள் என அழைக்கப்படுவர். இத்தகைய கூட்டாளி பொறுப்பும் வரையறாப் பொறுப்பாகும். 11/17/2018 MMS
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.