Download presentation
Presentation is loading. Please wait.
1
June holiday homework higher tamil e-book
By : d . Harini , 5c1
2
அழகா? பயனா? அழகா? பயனா?
3
ஓர் அடர்ந்த காட்டில் மான் ஒன்று வாழ்ந்து வந்தது.
4
ஒரு நாள், மான் வெகு நேரம் உணவு தேடி அலைந்தது
ஒரு நாள், மான் வெகு நேரம் உணவு தேடி அலைந்தது. அதனால், அதற்கு தாகம் எடுத்தது. தாகம் எடுத்ததால் அது அருகில் இருந்த ஓர் ஏரியை நோக்கிச் சென்றது.
5
மான் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது, தனது பரந்த கொம்புகளின் அழகைத் தண்ணீரில் பார்த்து பெருமிதம் கொண்டது; ஆனால், தனது மெலிந்த கால்கள் தன் அழகைக் கெடுப்பதாக நினைத்தது.
6
அப்போது, யாரோ காய்ந்த இலைகள் மேல் நடக்கும் சத்தம் கேட்டது
அப்போது, யாரோ காய்ந்த இலைகள் மேல் நடக்கும் சத்தம் கேட்டது. மான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தது. வேடன் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் தன்னை நோக்கி குறி வைத்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தது.
7
ஆபத்தை உணர்ந்த மான் உடனே ஓட்டம் எடுத்தது
ஆபத்தை உணர்ந்த மான் உடனே ஓட்டம் எடுத்தது! எந்த கால்களைக் கண்டு வெட்கமடைந்ததோ, அந்தக் கால்களின் உதவியால் மின்னல் வேகத்தில் காட்டிற்குள் ஓடி வேடனிடமிருந்து தப்பியது.
8
அது தன் அறியாமையை நினைத்து வருந்தியது
அது தன் அறியாமையை நினைத்து வருந்தியது. அழகினால் மட்டும் பயனில்லை என்பதை மான் நன்றாக உணர்ந்து கொண்டது.
9
*** முற்றும்! ***
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.