Download presentation
Presentation is loading. Please wait.
1
FeTNA : An Outlook
2
What is the Federation of Tamil Sangams of North America?
FeTNA is an umbrella organization of Tamil Sangams that function within the North American Continent. It is a registered, non-profit, tax-exempt 501(c)(3) organization. FeTNA was founded in 1987 by five Tamil Sangams: Tamil Association of Delaware Valley, Tamil Sangam of Washington & Baltimore, New York Tamil Sangam, Ilankai Tamil Sangam and Harrisburg Tamil Sangam. An assembly of over 400 Tamils near Philadelphia celebrated the inauguration in the spring of Since then the Federation (FeTNA for abbreviation) has organized an annual convention each of the subsequent years.
3
Tax-exempt 501(c)(3) Organization Determination letter issued by the US Department of Treasury.
4
Why is FeTNA needed? The Tamils in the USA and Canada are spread over the entire continent. Distance has prevented us from forming large communities. A few well-organized Tamil Sangams are present in large metropolitan areas where there is sufficient number of Tamils present to obtain a sense of Tamil Togetherness. By and large, most Tamil Sangams consist of less than 100 active families. These are too small to form active communities and develop community features and resources, and fragile enough to fall prey to factionalism. Networking with other Sangams offer the possibilities of connectivity, stability, and increased resources. FeTNA meets this need. FeTNA provides for developing connectivity among the Tamil Communities in North America. FeTNA’s primary objective is the preservation and growth of Tamil Language, Culture, and Community.
5
FeTNA’s core objectives?
FeTNA is a non-profit, literary, educational, cultural, charitable, secular, and nonpartisan organization. - To establish a centralized organization comprised of elected representatives of Tamil associations in North America and of individuals living in North America who have contributed to the objectives of the Federation and who join as Life Members. - To cultivate, promote, foster, and develop the advancement of knowledge in Tamil language, literature and culture. - To cultivate, promote, and foster the exchange of ideas and understanding between the Tamil people and other cultures. - To promote better understanding and foster friendship among various Tamil associations in North America and to encourage the formation of new Tamil Sangams. - To act upon charitable causes directly concerning the welfare of Tamil community living throughout the world.
6
What has FeTNA done to date?
FeTNA has been principally responsible for bringing together Forty five + Tamil Sangams to celebrate annually a festival in which the individuals and groups from member Sangams have presented artistic programs or interacted in one of many activities organized during the convention weekend. People who have attended the past twenty nine conventions have almost all had been complimentary in describing their experience. It has been tremendously heartening to note that the annual convention is an event to be at with the family. The youth have especially complimentary. The second accomplishment has been FeTNA's sponsorship of many Tamil Scholars in the past twenty nine years to visit the US and the various members Tamil Sangams. FeTNA is committed to sponsor at least two Tamil Scholars each year. The other accomplishments of FeTNA include the projects for Tamil chairs in American Universities. FeTNA supports.
7
Why should a Tamil Sangam become a member of FeTNA?
Local Tamil Sangam is analogous to your immediate family and FeTNA is your larger family. Another analogy that might describe the relationship is, FeTNA is a community while local Tamil Sangam is a single home in the community of FeTNA. By becoming a member of FeTNA, the local Tamil Sangam is eligible to FeTNA sponsored activities such as the Tamil Scholar Program. Perhaps the most important benefit to local Tamil Sangam is the connectivity it will develop with other Tamil Sangams in North America. Such benefits as job, business, and marriage connections have already benefited many.
8
Certificate of Good Standing
9
Organizations Eligible to Receive Tax-Deductible Contributions
Internal Revenue Service Organizations Eligible to Receive Tax-Deductible Contributions (Printed on 04/19/2016
10
Past FeTNA Conventions
Broomall, Pennsylvania Washington DC Staten Island, New York Hoffman Estates, Illinois College Park, Maryland Kenosha, Wisconsin Somerset, New Jersey Toledo, Ohio Stamford, Connecticut Pittsburgh, Pennsylvania 1998 – Saint Louis, Missouri Atlantic City, New Jersey Tampa, Florida Southfield, Michigan University Park, Illinois Trenton, New Jersey Baltimore, Maryland Dallas, Texas New York, New York Raleigh, North Carolina Orlando, Florida Atlanta, Georgia Waterbury, Connecticut Charleston, South Carolina 2012- Baltimore, Maryland Toronto, Canada 2014- Saint Louis, Missouri San Jose, California 2016- Trenton, New Jersey Minneapolis, Minnesota 2018- Dallas , Texas
11
பேரவைத் தலைவர்கள் ஆண்டு பேரவைத் தலைவர்கள்
1988 முனைவர் முத்தரசன் 1989 திரு. விக்னராஜா 1990 திரு. தயாநிதி 1991 மருத்துவர் சோம இளங்கோ 1992 திரு. பால்பாண்டியன் 1993 முனைவர் தனிகுமார் சேரன் 1994 மருத்துவர்அழகு கணேசன் 1995 முனைவர் என். கோபாலசாமி 1996 திரு. சாக்ரட்டீஸ் நாச்சிமுத்து 1997 திரு. எஸ். கிருஷ்ணன் திரு. நாஞ்சில் இ. பீற்றர் ஆண்டு பேரவைத் தலைவர்கள் 1998 முனைவர் அரசு செல்லையா மருத்துவர் ராஜசேகரன் திரு. வ.ச. பாபு திரு சிவராமன் கருப்பையா 2005 முனைவர் வி.சி. தேவ் 2006 திரு. ரத்தினம் திரு. தில்லை குமரன் முனைவர் முத்துவேல் 2011 முனைவர் பழனி சுந்தரம் முனைவர் தண்டபாணி திருமதி. செந்தாமரை பிரபாகர்
12
பேரவைத் தமிழ்த் திருவிழாவின் மையக்கருத்துக்கள்
Broomall, Pennsylvania Washington DC Staten Island, New York Hoffman Estates, Illinois College Park, Maryland Kenosha, Wisconsin Somerset, New Jersey Toledo, Ohio Stamford, Connecticut Pittsburgh, Pennsylvania Edwardsville, Illinois Atlantic City, New Jersey Tampa, Florida Southfield, Michigan University Park, Illinois Trenton, New Jersey 2004- இடம் பெயர்ந்தோம் ! தடம் பதித்தோம் !! தமிழால் இணைவோம்! தமிழைப் போற்றுவோம்!! New York, New York Raleigh, North Carolina 2008- இனம் வாழ மொழி காப்போம் ! மொழி காக்கக் கைக்கோப்பொம் !! உணர்வு கொள்வோம் ! உரிமை காப்போம் !! 2010- செந்தமிழால் சேர்ந்திணைவோம் ! செயல்பட்டே இனம் காப்போம் !! 2011- தனித் தமிழே நனிச் சிறப்பு ! இனம் பேணல் நம் பொறுப்பு !! 2012- தமிழால் இணைவோம் ! செயலால் வெல்வோம்!! 2013- யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! 2014- தமிழர் அடையாளம் காப்போம்! ஒன்றிணைந்து உயர்வோம்!! 2015- தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வ்வொம்!! 2016- தமிழ்க்கல்வி.. தமிழ்ப்பள்ளி... 2017-தமிழர் கலையைப் போற்றிடுவோம் ! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!! 2018 -செந்தமிழ் இருக்கை செய்வோம் ! செம்மொழி சிறக்கச் செய்வோம் !!
13
பேரவை கடந்த காலத்தில் ஆற்றியுள்ள தொண்டுகளில் சில ..
பேரவையின் மாநாடுகளில் ஒரு பக்கம் வெகுமக்களின் திரைப்பட விருப்பத்தை அடிப்படையிலான நிகழ்ச்சிகள் சிறிதளவு இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் மரபுக்கலைகளையும், நாட்டுப்புறக் கலைகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் துணிச்சலுடன் ஏற்பாடு செய்து வந்திருக்கின்றனர். அந்த அடிப்படையில் கடந்த பல ஆண்டுகளாக பேரவை இதைச் செய்து வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழு, கே. ஏ. குணசேகரன் குழு, புஷ்பவனம் குப்புசாமி குழு, “நிஜ நாடக இயக்கம்” புகழ் மு. இராமசாமி குழுவினரின் "நந்தன் கதை", புதுச்சேரி ஆறுமுகம் குழுவினரின் “மதுரைவீரன் தெருக்கூத்து”, திண்டுக்கல் சக்தி தப்பாட்டக் குழு, வீரத்தாய் வேலுநாச்சியார், கல்கியின் சிவகாமியின் சபதம் போன்ற தமிழர்களின் மரபுக்கலைக் குழுக்களைத் தொடர்ந்து அழைத்து வந்து மாபெரும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் விளிம்புநிலை மட்டும் ஒடுக்கப் பட்ட இனத்தவர்களின் சிக்கல்களைச் சித்தரிக்கும் கலைஞர்களை அமெரிக்க மண்ணுக்கு அழைத்து அவர்களை கௌரவித்து அனைத்துத்தரப்பு தமிழர்களும் நம் பண்டைய சமூகச் சீர்கேடுகளைக் களைந்து ஒன்றுபட்டு முன்னேற வேண்டும் என்று செயலில் காட்டி வருகிறது பேரவை. எடுத்துக்காட்டாக பேரவை விழாக்களுக்குkuuஅழைக்கப் பட்ட திருநங்கை நர்த்தகி நடராஜன், தலித்து எழுத்தாளர் சிவகாமி, நாட்டுப்புற இசைக்கலைஞர் மற்றும் ஆராய்ச்சியாளர் கே.ஏ.குணசேகரன், திண்டுக்கல் சக்தி தலித்து மகளிர்குழு போன்ற சிறப்பு விருந்தினர்களை கூறலாம். அமெரிக்க மண்ணில் உள்ள வேறு எந்த இந்திய இன அமைப்பும் செய்யாத சாதனை இது. நல்ல இலக்கியவாதிகளையும் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், தமிழ் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து கௌரவித்துள்ளது பேரவை. ஜெயகாந்தன், பிரபஞ்சன், சிவகாமி, சுஜாதா, சிவசங்கரி, கவிஞர்கள் அறிவுமதி, இன்குலாப், வைரமுத்து, மு.மேத்தா, அப்துல் இரகுமான், சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழன்பன், சேரன், கனிமொழி, ஜெயபாஸ்கரன், தாமரை, நா.முத்துக்குமார், தமிழாராய்ச்சியாளர்கள் கா. சிவத்தம்பி, பழனியப்பன், தமிழறிஞர்கள் தமிழண்ணல், சிலம்பொலி செல்லப்பன், மதிவாணன், ஓவியர் புகழேந்தி, அருள்மொழி, திரைப்பட இயக்குநர்கள் பாரதிராசா, சீமான், தங்கர் பச்சான், சொற்பொழிவாளர்கள் வைக்கோ, தியாகு, பர்வீன் சுல்தானா என எத்தனையோ பெயர்களைக் குறிப்பிடலாம்.
14
பேரவை இலங்கையில் ஐம்பது ஆண்டுகளாக தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கு கொண்டு வந்திருக்கிறது பேரவை. ஈழத்துத் தலைவர்களையும், நாடாளுமன்றப் பிரதிநிதிகளையும், எழுத்தாளர்களையும், மலையகத்தமிழர்களின் பிரதிநிதிகளையும் வரவழைத்து அவர்களது குரலைத் தொடர்ந்து ஒலிக்கச் செய்திருக்கிறது. ஜனநாயக முறையில் அளித்து வரும் இந்த ஆதரவை வேண்டுமென்றே திரித்து பேரவை அமைப்பையே களங்கப்படுத்துவோரும் உண்டு. இருப்பினும் ஈழத்தமிழரின் உரிமைகளுக்காக எழுப்பப்படும் ஒவ்வொரு ஆதரவுக் குரலின் போதும் மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் கைதட்டியும், எழுந்து நின்று மரியாதை செலுத்தியும் தங்கள் ஒருமனதான வரவேற்பைத் தெரிவித்து வந்துள்ளனர். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழாராய்ச்சி செய்த/செய்யும் பேராசிரியர் இராமனுஜம், ஜார்ஜ் ஹார்ட், நார்மன் கட்லர், ஜேம்ஸ் லிண்ட்ஹோம் என பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியிருக்கின்றனர். அமெரிக்க மண்ணில் பிறந்து வளர்ந்த தமிழ் இளைஞர்கள் பலர் இம்முயற்சிகளுக்கு உதவியுள்ளனர். மாட்சிமை விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் பெரிதளவில் தொண்டு ஆற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது பேரவை. இவ்விருதினைப் பெற்றவர்களுள் முனைவர்கள் ஏ.கே.இராமானுஜம், வ.ஐ.சுப்பிரமணியம், மணவை முஸ்தபா, கா.சிவத்தம்பி, தமிழிசை ஆராய்ச்சியாளர்கள், வீ. பா. க. சுந்தரம், ந. மம்மது போன்றவர்கள் மிக முக்கியமானவர்கள். அமெரிக்க மண்ணில் நிரந்தரமாகத் தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதற்காக பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பீடம் ஏற்படுத்த பணம் திரட்டி உதவியது. தற்பொழுது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்ட உதவி செய்துவருகிறது. 2005ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்தியது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இந்த மாநாட்டில், திருக்குறளில் ஆராய்ச்சி செய்து வரும் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வழங்கினர். இக்கட்டுரைகள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தினரால் நடத்தப்படும் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டன.
15
2003-ல் முதல்முறையாக அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி கற்பிக்கும் கோடைகால முகாம் நடத்தப் பட்டது. மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில் நடந்த இம்முகாமில் அமெரிக்கா, கனடா நாடுகளிலிருந்து மொத்தம் 22 மாணவர்கள் கலந்து கொண்டு தமிழ் கற்றனர். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு முகாம்கள் வெவ்வேறு நகரங்களில் நடத்தப் பட்டுள்ளன. அமெரிக்கத் தமிழ் இளைஞர் அமைப்பான NTYO இங்கு பிறந்து வளர்ந்த தமிழ்ப் பிள்ளைகளால் ஆரம்பிக்கப் பட்டது. இவர்களும் பேரவை மாநாட்டில் தனியே தங்களுக்கென்று சில நல்ல நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கின்றனர். இவை பெரும்பாலும் ஆங்கிலமும் தமிழும் கலந்து நடத்தப் பட்டாலும், தமிழ்ப் பண்பாட்டுக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளே. 2006-ல் மதவாத அமைப்புகள் கலிபோர்னியா மாநில பள்ளிக்கூட வரலாற்றுப் பாட நூல்களில் இந்திய வரலாற்றை திரித்து தவறான முறையில் திணிக்க முனைந்தது. பேரவை சில அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியர்களுடனும் மற்ற மதசார்பற்ற இந்திய அமைப்புகளுடனும் சேர்ந்து போராடி அந்த வரலாற்றுத் திரிப்பை முறியடித்தது. கணினித் தமிழின் வளர்ச்சிக்கு பேரவை அமைப்பு ரீதியாக தன்னால் இயன்ற ஆதரவை அளித்து வருகிறது. தமிழ் யுனிகோடு வரிசையில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய உலக யுனிகோடு நிறுவனத்துக்குப் பரிந்துரைக்க தமிழக அரசு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. பேரவை நிர்வாகக் குழுவும் தமிழக அரசின் பரிந்துரைகளை ஆதரித்து உலக யுனிகோடு நிறுவனத்துக்கு தன் கருத்துக்களை அனுப்பியுள்ளது. ஆழிப்பேரலைகள் (சுனாமி) ஏற்படுத்திய மிகப் பெரும் சேதத்தின் போது தமிழ் நாட்டுக்கும், தமிழ் ஈழத்துக்கும் பொருளுதவியும், பண உதவியும் அளித்தது பேரவை. அதுமட்டுமல்லாமல் கும்பகோணத்தில் நடந்த பள்ளி தீ விபத்தின் போது உடனடியாக நிதி திரட்டி வழங்கியது. கட்ரீனா புயல் தாக்கிய அமெரிக்க நகரமான நியூஆர்லியன்ஸுக்கும் பேரவை உதவிகளை அனுப்பியது. ஆண்டு தோறும் பொங்கல் அன்று சிகாகோ நகரில் முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் உணவு வழங்கி வருகிறது. இது போல் எண்ணற்ற சேவைகளில் பேரவைவும், அதன் அங்கங்களான பல தமிழ்ச் சங்கங்களும் செய்து வருகின்றன. இதுதவிர கடந்த பல ஆண்டுகளாக திருமணத்துக்கான இளைஞர்கள் சந்திப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். இவை சாதியை மறுத்த திருமணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
16
வருங்கால திட்டங்கள் குறுங்கால திட்டங்கள் (Short term Plans) நீண்டகால திட்டங்கள் (Long term Plans) - Continually develop Tamil Schools in North America. Work with American Tamil Academy and develop appropriate curriculum for Tamil education. Organize Tamil Cultural events in collaboration with other Tamil Organizations. Organize Tamil Issai events every year to uphold the richness of traditional music. Take necessary steps to get college credits for Tamil as a second or third language. Take appropriate steps to keep up our culture and heritage to the next Generation. -Organizing monthly meetings in Tamil Language & Literature on online. Help to Create of Tamil Centers through out North America. Help to create more Tamil Chairs in North American Universities. Help to create Tamil business network. Help to create old age homes for our Elders. Student exchange programs for Tamil Students.
17
FeTNA – Convention Format (General) Day 1. Star Night
First day event in hotel hosting majority of guest. Star Night to meet and greet chief guests - Special event to honor donors & Sponsors - Can Interact with guests Day 2 .Main event at Convention center-First day 1st day main event - Convention Center Stage தமிழ்ச் சங்கங்களின் நிகழ்ச்சிகள் - நாட்டுப்புற மற்றும் மரபுக்கலை நிகழ்ச்சிகள் - தமிழிசை & வரலாற்று நாட்டிய நாடகங்கள் திரை நட்சத்திரங்களின் கலாட்டா - Guest Speeches etc Day 3–Main event at convention center- Second day 2nd day main event -Convention Center Stage தமிழ்ச் சங்கங்களின் நிகழ்ச்சிகள்-கவியரங்கம், கருத்துக்களம், சிறப்புரை-இலக்கிய வினாடிவினா -சிறப்பு மெல்லிசை நிகழ்ச்சி Day 4- Last day – Closing event Last day event in Hotel Special Meeting and Speeches -In hotel hosting majority of FeTNA guest தமிழறிஞர்கள் உடன் உரையாட வாய்ப்பு
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.