Download presentation
Presentation is loading. Please wait.
1
சிப்கோ போராட்டம் The Chipko Movement
Sriparna Tamhane for Teachers of India
2
சிப்கோ போராட்டம் என்றால் என்ன?
1970-துகளில் இந்தியா முழுவதும் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு மக்களிடையே பரவியது. இந்தப் போராட்டத்திற்கு இட்ட பெயர் ‘தழுவுதல்’ என்ற சொல்லிருந்து பிறந்ததாகும். குத்தகைக்காரர்களின் ஆட்கள் மரங்களை வெட்ட வரும்போது, கிராமத்து மக்கள் அந்த மரங்களை அணைத்துக் கொண்டு மரங்களை வெட்டவிடாமல் தடுத்த காரணத்தால் அந்தப் பெயர் பெற்றது.
3
முதல் சிப்கோ போராட்டம் ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக மேல் அலகாணந்தா பள்ளத்தாக்கிலுள்ள மண்டல் என்ற கிராமத்தில் தோன்றியது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், உத்திர பிரதேசத்தின் பல இமயமலையில் இருக்கும் பல நகரங்களுக்கும் பரவியது.
4
அரசாங்கம் காட்டின் ஒரு பகுதியை விளையாட்டுச் சாதனங்களை உருவாக்கும் ஒரு நிறுவனத்திற்கு அளிக்க முடிவெடுத்த போது இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. அரசாங்கத்தின் இந்த முடிவு கிராமத்து மக்களைக் கோபம் கொள்ள வைத்தது.
5
அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள் காட்டிற்குள் சென்று, மரங்களைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு குத்தகைதாரர்கள் மரங்களை வெட்டுவதிலிருந்து மரங்களைக் காப்பாற்றினார்கள்.
6
அதன் பிறகு, நாட்டின் பல பாகங்களில் உள்ள கிராமப் பெண்கள் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தினார்கள்.
7
அவர்கள் தங்கள் போராட்டத்திற்கு ஏற்ற முழக்கத்தை உருவாக்கினார்கள்:
“மண் எங்களுக்குச் சொந்தம், நீர் எங்களுக்குச் சொந்தம், காடுகள் எங்களுக்குச் சொந்தம். எங்களது மூதாதையர்கள் உருவாக்கிய காடுகளை காப்போம் காப்போம் கடைசிவரை காப்போம்.”
8
இமயமலைக் குன்றுகளில் நிகழ்ந்த சிப்கோ போராட்ட வெற்றியின் காரணமாக பல மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டன.
Similar presentations
© 2025 SlidePlayer.com. Inc.
All rights reserved.